ஏ தமிழே உன்னை சுவாசிக்கும் பாரதிகளில் நானும் ஒருவன்...
ஏன் அப்படி, அத்துணை குழைவு அவனிடம் மட்டும் ?
எமக்கு அந்த அருகதை இல்லாமல் போனதோ ?
ஏங்குகிறது மனது உன்னை எடுத்து கையாள
எட்டவில்லையோ உன் செவிக்கு அதன் விசும்பல்கள் ?
என்னற்றோரை பெற்ற இறுமாப்போ ?
எனினும் இழப்பாய் ஒரு பாரதியை
எண்ணத்தில் கலந்தவள் நீ
எப்பாடுபட்டேனும் பெற்றே தீருவேன் உன்னை
எனக்கும் அருள்வாள் அவ்வரத்தை பராசக்தி
என்னையும் அவனையும் பெற்றவள் அவள் அன்றோ
எட்டும் அன்று, ஒங்கியறையப்படும் என் முழக்கம் உன் செவிப்பறைகளில்
என்னிடமும் குழைவாய், நெளிவாய் அன்று
ஏனென்றால் நீ என்னவள் அன்றோ
ஏ தமிழே உன்னை சுவாசிக்கும் பாரதிகளில் நானும் ஒருவன்... உணர்கின்றேன் உன்னை உயிர் வரை வாழ்க நீ !
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment